• Sat. Aug 1st, 2026

24×7 Live News

Apdin News

அபிஜித் தீப்கே குடும்பத்திற்கு பாஜக-வில் இணையுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

Byadmin

Aug 1, 2026


அபிஜித் தீப்கே

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று ஜூலை 30ஆம் தேதி கோரிக்கை விடுத்தார்.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியின்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள், அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தீப்கே, “போராட்டங்களின்போது மாணவர்கள் தாக்கப்பட்ட விதமும், அவர்களின் ரத்தம் சிந்தப்பட்டதும் அமித் ஷாவின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. டெல்லி காவல்துறை அவருக்குக் கீழ்தான் செயல்படுகிறது. ஒருவேளை அமித்ஷாவுக்கு இது குறித்துத் தெரியவில்லை என்றால், அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி” என்று கூறினார்.

அதோடு, பாஜகவில் இணைய வேண்டுமென்று தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்ததாகவும் தீப்கே குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயரை தீப்கே வெளியிட வேண்டும் என்றும் கூறியது.

By admin