• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.450 கோடிக்கு ஏலம் போனது எப்படி?

Byadmin

Nov 1, 2026


அருங்காட்சியகம், நானோடைரானஸ், எலும்புக்கூடு, ஏலம், டைனோசர்

படக்குறிப்பு, நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில், “ஜோடி” என்று செல்லப்பெயரிடப்பட்ட நானோடைரானஸ் வகை டைனோசரின் எலும்புக்கூடு, ஏலத்திற்கு முந்தைய காட்சிக்காக வைக்கப்பட்டது

    • எழுதியவர், ஆங்கஸ் தாம்சன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிறிய வகை ‘டைரனோசொரஸ் ரெக்ஸ்’ (T. rex) என்று முன்பு தவறாக அடையாளம் காணப்பட்ட ஒரு டைனோசரின் எலும்புக்கூடு, பின்னர் தனி இனத்தைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டது. இந்த எலும்புக்கூடு ஏலத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.450.42 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

‘ஜோடி’ (Jodie) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடு சுமார் 10 அடி உயரம் கொண்டது. நியூயார்க்கைச் சேர்ந்த சதபீஸ் (Sotheby’s) ஏல நிறுவனம் இதனை விற்பனை செய்துள்ளது. இது தனித்துவமான டைனோசர் இனம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி ஓராண்டுக்குப் பிறகு இந்த ஏலம் நடைபெற்றுள்ளது.

இறைச்சி உண்ணும் இந்த டைனோசர், கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தது. ஏலத்திற்கு முன்பு, இதன் விலை குறைந்தது 9 மில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிக விலைக்கு இது விற்பனையானது. இதே ஏல நிறுவனம், கடந்த ஜூலை மாதம் ‘கஸ்’ (Gus) எனப் பெயரிடப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் எலும்புக்கூட்டை 50.1 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது.

இந்த ஏலம், டைனோசர் புதைபடிவங்களைத் தனியார் வசம் விற்பனை செய்வது சரியா அல்லது அவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டுமா என்ற விவாதத்தை விஞ்ஞானிகளிடையே மீண்டும் எழுப்பியுள்ளது.



By admin