• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

முழுநாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கை | 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது

Byadmin

Nov 1, 2026


முழுநாடும் ஒன்றாக எனும் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்துக்கமைவாக கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் உட்பட 3 இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், முழு நாடும் ஒன்றாக எனும் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய ரீதியிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப் படைப்பிரிவினர் மற்றும் முப்படையினரும் இணைத்துக்கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு வருட காலம் பூர்த்தியாகி உள்ள நிலையில், இதுவரை 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கைதானவர்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 50 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைகளின் போது, பிரதான போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் 1,043 பேரும், ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 18 முதல் 21 வயதுக்கிடைப்பட்ட 4,238 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக, போதைப்பொருள் கடத்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய முப்படைகளைச் சேர்ந்த 85 உத்தியோகத்தர்களும், 24 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைதாகியுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

By admin