• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை – இரான் தனது பலமாக கருதும் ‘ஒரு விஷயம்’ என்ன?

Byadmin

Apr 14, 2026


அமெரிக்காவுக்கு சீனாவின் புதிய எச்சரிக்கை – இரான் தனது பலமாக கருதும் 'ஒரு விஷயம்' என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

அமெரிக்கா இரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், இரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதை பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு இரான் துறைமுகங்களுக்குச் சென்று வந்துள்ளன.

இதற்கிடையே இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

4 கப்பல்கள் எவை?

கண்காணிப்பு தரவுகளின்படி, இரானின் பண்டார் இமாம் கொமெய்னி துறைமுகத்திற்குச் சென்ற கிறிஸ்டியானா என்ற சரக்குக் கப்பல், முற்றுகை தொடங்கிய பிறகு திங்களன்று நீரிணையைக் கடந்துள்ளது.

இரான் தொடர்பான வர்த்தகத்திற்காக அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ரிச் ஸ்டாரி கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் ஷார்ஜாவிலிருந்து கிழக்கு நோக்கி ஹோர்மூஸ் நீரிணை வழியாக இரவு நேரத்தில் பயணித்ததை தரவுகள் காட்டுகின்றன.

By admin