• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர 7 நிபந்தனைகள்: ஈரான் அறிவிப்பு

Byadmin

Sep 20, 2026


அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்கேற்பதற்கு ஈரான் கடுமையான 07 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டார் மத்தியஸ்தர்கள் ஊடாக இந்த நிபந்தனைகள் அமெரிக்க அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

அனைத்து முனைகளிலும் யுத்த நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருதல், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் மற்றும் சொத்துகளை விடுவித்தல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் தடைகளை நீக்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இந்த நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் மீளவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு மொத்தம் 07 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், போர் முடிவுக்கு வர வேண்டுமானால் ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் வொஷிங்டன் ஏற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா தான் சிக்கியுள்ள போர்ப் பொறியில் இருந்து விடுபட வேண்டுமானால், ஈரானின் நியாயமான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், இல்லையேல் தீர்க்கமானதொரு போரை எதிர்கொள்ள தெஹ்ரான் தயாராக இருப்பதாகவும் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

By admin