• Mon. Nov 16th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுடனான மோதலில் சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனை இரான் குறிவைப்பது ஏன்? ஓர் அலசல்

Byadmin

Nov 16, 2026


பஹ்ரைன், இரான், அமெரிக்கா, ரேடார், ஏவுகணைகள், இரான் புரட்சிகரப் படை

படக்குறிப்பு, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பைத் தாக்கி அழித்துவிட்டதாக ஈரானின் புரட்சிகரப் படை கூறியுள்ளது (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடாரை குறிவைத்து அழித்துவிட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சமீபத்தில் கூறியது.

ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, தற்காப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுப்பதே இத்தகைய ரேடார் அமைப்பின் முக்கியப் பணியாகும்.

இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் இந்தக் கூற்றை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “இரானின் புரட்சிகர காவல் படை பஹ்ரைனை நோக்கி இரண்டு தாக்குதல் டிரோன்களை ஏவியது. அமெரிக்க ராணுவம் அவை இரண்டையும் சுட்டு வீழ்த்தியது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எந்தச் சேதமும் உண்டாகவில்லை” என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிக் என்ற இடத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாகவே பஹ்ரைனில் அமெரிக்க ரேடார் அமைப்பைத் தாக்கியதாக இரான் தெரிவித்துள்ளது.

By admin