• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

அமேசான் காடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்களா? பழங்கால நாகரிகம் குறித்து புதிய ஆய்வு

Byadmin

Nov 3, 2026


தரையை மேலிருந்து பார்க்கும் வான்வழிக் காட்சி. பெரும்பாலான பகுதி அடர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. தரையில் ஆழமாகப் பதிக்கப்பட்ட பல கோடுகளும் வடிவங்களும் தென்படுகின்றன. அவற்றில், ஒரு பெரிய சதுரம் ஒரு கோட்டின் மூலம் பெரிய வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    • எழுதியவர், ஆண்ட்ரே பியர்நாத்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் மரங்களுக்கு அடியில் மறைந்திருந்த நூற்றுக்கணக்கான நில அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படும் ஒரு பண்டைய நாகரிகத்தால் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

தரையில் தோண்டி உருவாக்கப்பட்ட இந்தப் பிரமாண்டமான கட்டமைப்புகள் ‘ஜியோகிளிஃப்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.

இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய ஆறுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதியில் கட்டப்பட்டவை.

“கிரேக்கத்தில் பித்தகோரஸ் தனது தேற்றத்தை உருவாக்கிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், அமேசானில் இந்த மக்கள் பிரமாண்டமான வடிவியல் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தனர்,” என்று அமேசான் ஜியோகிளிஃப்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான தொல்லுயிரியலாளர் அல்சியூ ரான்ஸி கூறுகிறார்.



By admin