• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

அலாஸ்காவில் அடர்ந்த மூடுபனியில் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கிய விமானம்: 8 பேர் உயிரிழப்பு

Byadmin

Aug 22, 2026


விமான போக்குவரத்து நிர்வாகம் பரிந்துரை:

வியாழக்கிழமை நண்பகல் வாக்கில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகளின் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்களில் அமெரிக்க ராணுவ பொறியியல் பிரிவின் ஊழியர்கள் இருவர் அடங்குவர்.

சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணை தாக்குதல் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாக, 1950-க்களில் இந்த ரேடார் தளம் கட்டப்பட்டது. தற்போது ​​இது ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கிய கடலோர வான்வெளியை கண்காணிக்கும் பணியை செய்கிறது.

இத்தளத்தில் மலையின் சரிவில் அமைக்கப்பட்ட சரளை கற்களால் ஆன ஓடுபாதை உள்ளது. அங்கு தரையிறங்கும்போது விமானிகள் ஜி.பி.எஸ். (GPS) மற்றும் பிற கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) பரிந்துரைக்கிறது.

By admin