பிரதமர் எக்ஸ் தள பதிவு:
“2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடையும் வேளையில், நமது தேசத்தை உறுதி, ஆர்வம் மற்றும் குறிப்பிடத்தக்க விளையாட்டு உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவின் ஒவ்வொருத்தருக்கும் எனது பாராட்டுகள்,” என்று மோடி எக்ஸ் தள பதிவில் கூறினார்.
இந்திய பதக்க வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், அவர்களின் செயல்பாடுகள் “நாட்டுக்கு அளவற்ற மகிழ்ச்சியை” அளித்துள்ளதாக கூறினார்.
2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடையும் இவ்வேளையில், நமது தேசத்தை உறுதி, பேரார்வம் மற்றும் அபாரமான விளையாட்டு உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது பாராட்டுகள்.
தங்கள் செயல்பாடுகளால் தேசத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்த, பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த போட்டிகள் வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனைகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவை அடிமட்ட அளவிலும் விளையாட்டை வலுப்படுத்த பங்களிக்கட்டும்.