சிவகுமார் சொன்னது என்ன?
இந்நிலையில் விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை என்றும், அணையைக் கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு உரிமை உண்டு என்றும் சிவகுமார் தெரிவித்தார்.
“இது என் மாநிலம், இது என் உரிமை, என்னை யார் விமர்சித்தாலும் எனக்குக் கவலையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக என யார் எதிர்த்தாலும் தனது நிலைப்பாடு மாறாது என்றும், அனைவரும் நாட்டின் சட்டங்களையும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டம் நன்மை பயக்கும் என்பதைத் தமிழகத்திற்கு நேரடியாக எடுத்துரைக்க தயாராக இருப்பதாகவும் சிவகுமார் கூறினார்.
மாணிக்கம் தாகூர் மற்றும் பிற தமிழகத் தலைவர்களை ஒரு தூதுக்குழுவுடன் கர்நாடகாவிற்கு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அணை கட்டப்படவுள்ள இடத்திற்கு அவர்கள் சென்றால், இந்தத் திட்டத்தின் நன்மைகளை விளக்க முடியும் என்றும் அவர் கூறினார்.