• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

இயக்குநர் ஷங்கரின் 10 பிரபல பாடல்களும் அவை உருவான விதமும்

Byadmin

Aug 17, 2026


இயக்குநர் ஷங்கர்

பட மூலாதாரம், ShankarShanmugam

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படங்களை எடுக்கும் பாணியைக் கொண்டவர் இயக்குநர் ஷங்கர். தான் இயக்கும் படங்களில் பாடல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

அவர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்கான பட்ஜெட்டிலேயே ஒரு சிறிய பட்ஜெட் படத்தைத் தயாரித்துவிடலாம் என்றும் கோலிவுட்டில் பேசப்படுவது உண்டு. அவரது படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு சில விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அவற்றுக்கென தனி வரவேற்பு உள்ளது.

இன்று இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள். அவரது படங்களில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் குறித்து, அவருடன் பணியாற்றியவர்களும் நண்பர்களும் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

’ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’என் வீட்டு தோட்டத்தில்’ பாடலில் நடிகை

பட மூலாதாரம், APITamilSongs

படக்குறிப்பு, ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் வீட்டு தோட்டத்தில்’ பாடலில் நடிகை

‘ என் வீட்டு தோட்டத்தில் ‘

ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் ஷங்கரை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் பிபிசி தமிழிடம், ”ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும். அடுத்து அவர் இணைந்த ‘காதலன்’ படத்தின் பாடல்களும் அந்த வரிசைதான்,” என்றார்.

”கவிஞர்கள் வாலி, வைரமுத்து எழுதிய வரிகள், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ஷங்கரின் கிரியேட்டிவிட்டி ஆகியவை அதற்கு முக்கியக் காரணம்,” என்றார்.

By admin