• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரான் தாக்குதலில் 20 அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் – செயற்கைக்கோள் படங்கள் உணர்த்தும் உண்மை என்ன?

Byadmin

Jun 2, 2026


இரான் - அமெரிக்கா,  இஸ்ரேல்
படக்குறிப்பு, வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டதை விட இந்தத் தாக்குதல்கள் மிகவும் விரிவானவை என்பதை இப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

போர் தொடங்கிய பிறகு இதுவரை இரான் நடத்திய தாக்குதலில் 20 அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.

வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டதை விட இந்தத் தாக்குதல்கள் மிகவும் விரிவானவை என்பதை இப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து மத்திய கிழக்கில் உள்ள எட்டு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முக்கியத் தளங்களை இரான் குறிவைத்ததால், அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ரேடார்களுக்கு மில்லியன்கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக இரான் மற்றும் லெபனான் முழுவதும் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இரான் அமெரிக்கத் தளங்களையும், அமெரிக்க ராணுவத்தின் கூட்டுத் தளங்களையும் குறிவைத்துள்ளது.

‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தொடங்கியதிலிருந்து இரானில் 13,000க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக பென்டகன் கூறுகிறது.

By admin