• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

உங்கள் ஓட்டுநர் உரிமம் எந்த 6 விதிமீறல்களுக்காக இடைநீக்கம் செய்யப்படலாம் தெரியுமா?

Byadmin

Oct 5, 2026


உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியதற்காக, கடந்த ஆண்டில் மட்டும் 95,568 ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்திருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மொபைல் ஃபோனில் பேசியபடி வாகனங்களை இயக்கியதற்காக 23,295 பேருடைய ஓட்டுநர் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 8 முதல் 9 லட்சம் பேர் வரை புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். ஒரு லட்சம் பேரின் உரிமங்கள் மீது 6 விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் எந்தெந்த விதமான விதிமீறல்களுக்காக ஓட்டுநர் உரிமங்கள் இடை நீக்கம் மற்றும் ரத்து செய்யப்படும், அதை எப்போது திரும்பப் பெற முடியும் என்பதை தமிழக போக்குவரத்துத் துறை இணைய தகவல்கள், அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவல்களின்படி இங்கு விளக்கபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர்?

தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டில் போக்குவரத்து மானியக் கோரிக்கையின்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தகவலின்படி, 2025 ஏப்ரல் முதல் தேதி வரையிலுமாக, மாநிலத்தில் மொத்தமாக 2 கோடியே 79 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். அன்றைய காலகட்டம் வரையிலும் தமிழகத்தில் 3.76 கோடி வாகனங்கள் பதிவு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 5% என்ற அளவில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 70.10 லட்சம் வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் 3.85% மட்டுமே.

By admin