• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கீதம் சீனிவாசராவ் வித்தியாசமான அணுகுமுறையால் முத்திரை பதித்த படங்கள் – ஒரு பார்வை

Byadmin

Oct 5, 2026


சிங்கீதம் சீனிவாச ராவ்: விசித்திரமான அணுகுமுறைகளை புகுத்தி காலம் தாண்டி நின்ற இயக்குநர்

    • எழுதியவர், ஜி.ஆர். மஹர்சி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனது காலத்தைவிட முன்னோக்கிப் பார்த்த மனிதர். அதனால்தான் அவரால் தெலுங்கில் முதல் காலப் பயணக் கதையான (Time Travel) ஆதித்யா 369 திரைப்படத்தை உருவாக்க முடிந்தது.

மாயாபஜார் திரைப்படத்தை இயக்கிய கே.வி. ரெட்டி உலகத் தரம் வாய்ந்த இயக்குநர். அவரது சீடரான சிங்கீதமும் அதே தரத்தில் இருந்தவர். புஷ்பக விமானம் உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. சிங்கீதம் 94 வயதில் மூப்பினால் காலமானார். மறக்க முடியாத திரைப்படங்களை அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 1931ஆம் ஆண்டு உதயகிரியில் பிறந்த சிங்கீதத்தின் குடும்பப் பெயரிலேயே பாடலும் இசையும் இடம்பெற்றுள்ளன. அவரது தாய் ஒரு வயலின் கலைஞர். சிறுவயதில் இருந்தே அவருக்கு பாடல்கள் மீதே ஈர்ப்பு இருந்தது.

சென்னையில் (அன்றைய மெட்ராஸ்) படித்துக் கொண்டிருந்த போது, ஹரீந்திரநாத் (சரோஜினி தேவியின் சகோதரர்) அவருக்கு நாடகத்தை கற்றுக் கொடுத்தார். பாடல் எழுதுவதற்கான அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது.

படிப்பை முடித்த பிறகு, அவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் விதி அவருக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தது.

By admin