• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

உடல் எடையைக் குறைக்க மருந்துகளை உட்கொள்வது பயன் தருமா? பக்க விளைவுகள் என்ன?

Byadmin

Jul 6, 2026


ஒசெம்பிக், மௌன்ஞரோ ஆகிய பிரபலமான வர்த்தகப் பெயர்களால் நன்கு அறியப்படும் செமாக்ளூடைட், டிர்ஸெபடைட் போன்ற மருந்துகளை, தற்போது லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓசெம்பிக், மௌன்ஜாரோ ஆகிய பிரபலமான வர்த்தகப் பெயர்களால் நன்கு அறியப்படும் செமாக்ளூடைட், டிர்ஸெபடைட் போன்ற மருந்துகளை, தற்போது லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    • எழுதியவர், மெலிசா ஹோகென்பூம்
    • பதவி, மூத்த சுகாதார செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகள் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை சாரா லெ ப்ரோக் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளார். அவர் தனது இளம் பருவ வாழ்க்கையின் பெரும்பகுதியில் உடல் பருமனுடன் போராடி, பலவிதமான உணவு முறைகளை முயன்று பார்த்துள்ளார்.

“எந்த மருந்தாக இருந்தாலும், அது வெளியானவுடன் ‘இதை முயற்சி செய்து பார்க்கலாம், இது எனக்குப் பலனளிக்கலாம்’ என்று நினைத்தேன்” என்று அவர் பிபிசியின் இன்சைட் ஹெல்த் நிகழ்ச்சியில் கூறினார்.

ஆனால், அவர் உடல் எடையைக் குறைத்தாலும்கூட, அது எப்போதும் மீண்டும் கூடிவிடும் என்பதுதான் பிரச்னை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, அவர் தற்போது கிட்டத்தட்ட 51 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

“திடீரென நான் உணவைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன்” என்கிறார் அவர்.

By admin