• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

உத்தரப் பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு

Byadmin

May 29, 2026


உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் குரானா பகுதியில் பெட்வா நதியின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில், தொழிலாளர்கள் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் திடீரென கடுமையான சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, பாலத்தின் பிரம்மாண்ட கான்கிரீட் கட்டுமான பகுதி இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

By admin