• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

ஆப்கனில் பெண் கல்விக்கு நீடிக்கும் முட்டுக்கட்டை – தாலிபன் அரசு கூறியது என்ன?

Byadmin

May 29, 2026


காணொளிக் குறிப்பு,

காணொளி: ஆப்கனில் பெண் கல்விக்கு நீடிக்கும் முட்டுக்கட்டை – தாலிபன் அரசு கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதுதான், உலகிலேயே மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் காட்சிகளில் ஒன்று.

ஆனால், தாலிபன் ஆட்சியில், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகளுக்கு இந்தச் சுதந்திரம் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்கள் பதின்ம வயதை எட்டும்போது, வீட்டிற்குள்ளேயே முடக்கப்படுவார்கள்.

இப்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தக் கல்வித் தடையால், அதிகமான குடும்பங்கள் தங்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றன.

தடை அமலுக்கு வந்த தொடக்க ஆண்டுகளில், ஆப்கன் பெண்கள் காபூல் மற்றும் பிற நகரங்களின் வீதிகளில் போராடி எதிர்ப்பு தெரிவித்தனர். தாலிபன் அரசின் படைகள் அந்தப் போராட்டங்களை மிகக் கடுமையாகவும் வன்முறையைக் கையாண்டும் ஒடுக்கின. அதன் பிறகு யாராலும் பொதுவெளியில் குரலை உயர்த்த முடியாத சூழல் உருவானது.

தாலிபன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்தல்லா ஃபித்ரத்திடம் இதுகுறித்த கேள்விகளைக் கேட்கும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin