• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை

Byadmin

May 29, 2026


வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15,000 க்கும் அதிகமான தானசாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தானசாலைகளை பதிவு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தொற்றுநோய்கள் பரவி வருவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளதால், தான ஏற்பாட்டாளர்கள் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சமில் முத்துகுட மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள், வெசாக் கூடுகள் மற்றும் பல வெசாக் வலயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்கள் வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தயாராகி வருவதுடன், தங்களது வீடுகளை வெசாக் கூடுகள் மற்றும் பல்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு அதிகரித்துள்ளபோதிலும், அவற்றின் விற்பனையில் கணிசமான வளர்ச்சி காணப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The post வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை appeared first on Vanakkam London.

By admin