306 ஆண்டு சாதனை முறியடிப்பு
1717ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கணிதவியலாளர் காலின் மேக்லரின் தனது 19வது வயதில் பேராசிரியராக பொறுப்பேற்றதே முந்தைய சாதனையாக இருந்தது.
306 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த உலக சாதனையை, நேத்தன் தாமஸ் தனது 18 வயதில், ஆகஸ்ட் 2023இல் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக இணைந்ததன் மூலம் முறியடித்துள்ளார்.
2008-ஆம் ஆண்டில் 18 வயதில் உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியராக சாதனை படைத்த அலியா சாபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர் ஆவார். இதன்மூலம் ஆண் பெண் என இருபாலரிலும் உலகின் இளம் பேராசிரியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் தாமஸ்.
தற்போது கின்னஸ் அங்கீகாரத்தின் மூலம் அவரின் சாதனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.