• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் பொய்யாக்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிமல்

Byadmin

Nov 21, 2026


அரசாங்கம் மீது எதிர்க்கட்சியின் பிரதான விமர்சகர்கள் முன்வைத்த  குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இன்று  பொய்யாக்கப்படடுள்ளன. ஊழலுக்கு துணைபோன ராஜபக்ஷர்களும், ரணில் விக்கிரமசிங்கவும் ஆட்சியில் இருந்திருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமாட்டார்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் நண்பர்கள். மக்களுக்கு வழங்கிய ஆணைக்குழு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம் என   சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20)  இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  ஏழாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2024 செப்டம்பர் 21ஆம் திகதி நாட்டு மக்கள்  எமக்கு  அதிகாரத்தையும், பொறுப்புக்களையும் ஒப்படைந்தார்கள். அந்த பொறுப்புகளை 5 வருட பயணமாகவே பார்க்கின்றோம். நாங்கள் அந்த பயணத்தில் உரிய பக்கத்தை நோக்கி போய்கொண்டிருக்கின்றோமா? இல்லையா? என்பதனை தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு  முன்னரும், அதிகாரத்துக்க வந்ததன் பின்னரும், பிரதான விமர்சகர்கள் கூறுவது என்னவென்று பார்க்க வேண்டும். செப்டம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் நாங்கள் வெற்றிப்பெற மாட்டோம்  என்று குறிப்பிட்டா வெற்றிப்பெற்ற பின்னர் மூன்று மாதங்கள்கூட இந்த அரசாங்கம் தொடராது என்று குறிப்பிட்டார்கள். 2025 டிசம்பரில் சஜித் ஜனாதிபதியாகுவார் என்றும்  குறிப்பிட்டார்கள். அதுவும்  நடக்கவில்லை. திடீர் தேர்தல் நடத்தப்படும் என்றார்கள். அத்துடன் கடனை மீளச் செலுத்த முடியாது என்றார்கள். ஆனால் தற்போது எவரும்  அவ்வாறு குறிப்பிடுவதில்லை.

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்றும்  அதனை செய்வதற்கு திறமையானவர்கள் இல்லையென்றெல்லாம் குறிப்பிட்டார்கள்.  ஆனால் நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வளவு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது அரசாங்கத்தில் இருந்தவர்கள் உண்மை நிலைமைகளை என்னிடம் உள்ள அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடியும்

இவர்களுக்கு முழுமையாக பொறாமையே இருக்கின்றது. தனக்கு நிதி அமைச்சராக முடியவில்லை என்றும், தன்னால் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வரவில்லை என்ற பொறாமை உள்ளது. அதில் பெரிய பொறாமையாக எங்களை போன்ற சாதாரணமானவர்கள் அரசாங்கத்தை செய்வதே இருக்கின்றது. ராஜபக்‌ஷக்கள் அரசாங்கத்தை செய்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் நாங்கள் எவர் மீதும் கோபத்துடன் செயற்படவில்லை.

ஸ்தீரமற்ற நிலையில் இருந்து ஸ்தீரமான நிலையை நோக்கியே எங்கள் பயணம் அமைந்துள்ளது. இந்த பயணத்தை உதாரணமாக கொழும்பில் இருந்து கண்டிக்கு செய்கின்றோம் என்றால் இன்னும் கண்டியை நெருங்கவில்லை. இடையிலேயே இருக்கின்றோம். கண்டியை நெருங்க இன்னும் காலம் இருக்கின்றது. நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றோம்.

பயண வழிகாட்டி

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசும் போது எங்களின் குழுவில் உள்ளவர்கள் திறமையற்றவர்கள் என்றும் ஹர்ஷன சூரிய பெருமவவால் முடியாது என்றும் தங்கள் பக்கத்தில் இருந்து ஒருவரை பெற்றுக்கொள்ளுமாறும் கூறினர். ஆனால் சர்வதேச நாணய நிதியத்த்தின் வரலாற்றில் இலங்கை 17ஆவது நிகழ்ச்சித் திட்டத்தில் இருக்கின்றது. இந்நிலையில் கனவான்கள் போன்று இந்த உடன்படிக்கையை நிறைவு செய்யும் முதலாவது அரசாங்கம் நாங்களாகும். எமது குழுவை சிறந்த குழு என்று சர்வதேச நாணய நிதியமும் கூறியுள்ளது. நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் இருக்கும் போது எந்த நிறுவனத்தையும் விற்கவில்லை.

நலன்புரிகளை நாங்கள் அதிகரித்துள்ளோம். சம்பளத்தை அதிகரித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு மட்டுமே வேலை செய்ய முடியுமாக இருக்கின்றது.  மக்களின் வாழ்க்கைத்தரத்தை தசம கணக்கிலாவது உயர்த்தி, நாட்டின் சுயாதீனத்துவம் மற்றும் இறையாண்மையை மேலும் பாதிப்படையச் செய்யாமல் பயணிக்கின்றோம். எதிர்வரும் மார்ச், ஏப்ரலில் அந்த உடன்படிக்கை நிறைவுக்கு வரும் என்றார்.

The post எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் பொய்யாக்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிமல் appeared first on Vanakkam London.

By admin