• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இந்து – முஸ்லிம் மக்கள் தொகை 2070-ல் எப்படி இருக்கும்? பியூ ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Nov 21, 2026


2022 அக்டோபர் 24 அன்று கவுகாத்தியில், இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒரு பெண் தனது வீட்டில் மண் விளக்குகளை ஏற்றுகிறார்.

படக்குறிப்பு, இந்துக்களின் ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பெண் ஒருவர் விளக்குகளை ஏற்றுகிறார்.

அடுத்த சில பத்தாண்டுகளிலும் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள். அதேவேளையில், நாட்டின் மத அடிப்படையிலான மக்கள்தொகை விகிதத்தில் படிப்படியான மாற்றம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் மதங்களின் அடிப்படையிலான மக்கள்தொகை 2070-ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், 2020-ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் 79% ஆக இருந்த இந்துக்களின் பங்கு, 2070-ஆம் ஆண்டில் 76% ஆகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு 15%-இல் இருந்து 20% ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக வயது வேறுபாடும் குழந்தைப்பேறு விகிதத்தில் உள்ள வேறுபாடும் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் இந்துக்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் சராசரியாக இளைய வயதினராக உள்ளனர். மேலும், அவர்களிடையே சராசரிக் குழந்தைப்பேறு விகிதமும் அதிகமாக உள்ளது.

தெற்காசியாவில் ஏற்படவுள்ள பரந்த மக்கள்தொகை மாற்றத்தின் மையமாக இந்தியா இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணிக்கிறது.

உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தோனீசியாவை முந்தி பாகிஸ்தான் முதலிடம் பிடிக்கும் என்றும், இந்தியா இரண்டாவது இடத்துக்கு வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள்தொகை கணிசமாக அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.

By admin