• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் கூறியது என்ன?

Byadmin

Jul 27, 2026


கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், “இந்தச் சம்பவத்திற்காக கருணை அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோன்ற வேலைவாய்ப்பை கோரி முன்வர வழிவகுக்கும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அரசு இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் போது, நிர்வாக அதிகாரத்தின் பயன்பாடு அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால், குழப்பமே நிலவும்,” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

By admin