உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 150 கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் துறவிகள், ஒரு ஆயர் மற்றும் கன்னியாஸ்திரீகள் வாடிகானை நோக்கி பேரணியாக சென்றனர்.
காசாவில் நடைபெறும் “இனப்படுகொலை” சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, அவர்கள் புனித பீட்டர் பேராலயத்தின் முன் பிரார்த்தனை செய்தனர்.
இஸ்ரேலின் காசா மற்றும் தெற்கு லெபனான் போரின் போது இறந்த 300 குழந்தைகளின் பெயர்களை கொண்ட பதாகையை, வாடிகனுக்கு செல்லும் பிரதான பெருஞ்சாலையில் போராட்டக்காரர்கள் ஏந்தி சென்றனர்.
பேரணியில் சென்றவர்கள் வாடிகன் எல்லைக்குள் நுழையவில்லை, மேலும் அவர்களுக்கு இத்தாலிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.