• Sat. Oct 17th, 2026

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம் அருகே தண்டவளத்தை ஒட்டி மண்சரிவு: ரெயில் சேவைகள் பாதிப்பு

Byadmin

Oct 17, 2026


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, பூசிவாக்கம் அருகே ரெயில் தண்டவாளத்தை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையிலான மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பெய்த கனமழையால், காஞ்சிபுரம் – வாலாஜாபாத் ரெயில் வழித்தடத்தில் பூசிவாக்கம் அருகே உள்ள எல்.சி.-21 பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

அப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் மண் சரிந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin