• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

ரோனி நடிக்கும் ‘தீயது வெல்லக் கேளீர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Byadmin

Oct 16, 2026


நடிகர் ரோனி கதையை வழிநடத்திச் செல்லும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தீயது வெல்லக் கேளீர்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரவீண் கிருஷ்ணராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தீயது வெல்லக் கேளீர்’ திரைப்படத்தில் ரோனி, கவி பிரியா, ஆர் ஜே ஜனா, கபில் ஷாம், இம்ரான், விக்னேசன் தேவராஜ், யுகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதிர் ராஜசேகரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார்.

திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசக் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு சிலோன் மெட்டல் இன்டஸ்ட்ரீஸ் ற்றும் வின்ட்சர் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இடம் பிடித்திருக்கும் எளிய மக்களின் உரிமைகளுக்கான கள போராட்ட நிகழ்வுகள், பாலின சிறுபான்மையினரின் உணர்வுகள், காதல், குடும்பம், சென்டிமென்ட், எக்சன், வில்லனிசம் என கொமர்சல் அம்சங்கள் அனைத்தும் இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

The post ரோனி நடிக்கும் ‘தீயது வெல்லக் கேளீர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin