• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் டீசர் வெளியீடு

Byadmin

Oct 15, 2026


சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரவீண் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

பிரபல சட்டத்தரணியாக உருவாக வேண்டும் என்ற சட்டம் படித்த பெண்ணின் வாழ்வியலை விவரிக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சாதாரண பெண்ணாகவும், சட்டம் பயின்ற சட்டத்தரணியாகவும் இருக்கும் கதையின் நாயகி, நீதிமன்றத்தில் பிரசித்தி பெற்ற மார்க்கண்டேயன் என்ற சட்டத்தரணியை போல் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பதும்… இதற்காக அவர் தன் பாணியில் முயற்சிப்பதும், மார்க்கண்டேயனை துணிச்சலுடன் எதிர்கொள்வதும் என காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

The post கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் டீசர் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin