• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

கேன் டோட் தவளை: ஆஸ்திரேலியாவில் இந்த தவளையை தடுக்க ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்படுவது ஏன்?

Byadmin

Nov 4, 2026


கேன் டோட் தவளை

ரியோ டின்டோ நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் விஷத்தன்மை கொண்ட கேன் டோட் தவளை (cane toad) பரவுவதைத் தடுக்கப் பல மில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது. அங்கு இந்தச் சுரங்க நிறுவனத்துக்குப் பெரிய இரும்புத் தாது சுரங்கங்கள் உள்ளன.

கேன் டோட் (Cane toad) என்பது தவளை இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுத்தன்மை கொண்ட உயிரினம்.

பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, இந்த தவளை தெற்குப் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க 28 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் ரூ 185 கோடி) செலவிட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் ‘தவளை தடுப்பு மண்டலம்’ ஒன்றை உருவாக்கவுள்ளது.

இந்த தவளை ரியோ டின்டோ நிறுவனத்தின் தொழிலுக்கு நேரடியாக அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், இதன் விஷம் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு வனவிலங்குகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியவை. மேலும், பில்பரா பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன.

பில்பரா பகுதியில் இரும்புத் தாதுக்காக, பழங்குடியின மக்களின் புனிதமான இரண்டு பாறைத் தங்குமிடங்களை அழித்ததாக ரியோ டின்டோ நிறுவனம் ஏற்கெனவே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.



By admin