• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் 3வது முறையும் நிராகரிப்பு ஏன்? – மத்திய அரசு சொல்லும் பஸ் திட்டம் சாத்தியமா?

Byadmin

Jul 29, 2026


கோவை மெட்ரோ ரயில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை மெட்ரோ ரயில்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் நிதி மற்றும் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை என்ன நடந்தது?

கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின்பு, ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை 655 பக்கங்களிலும், ரூ.11,360 கோடி மதிப்பிலான மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அறிக்கை 936 பக்கங்களிலும் தயார் செய்யப்பட்டு, நிதி மற்றும் ஒப்புதல் கோரி மத்திய அரசிடம் 2024 மே மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கோவை போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)
படக்குறிப்பு, கோவை போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)

3 முறை திருப்பி அனுப்பியுள்ள மத்திய அரசு

அதனை திருப்பி அனுப்பிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், மாற்றுத்திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த திட்டத்தை அனுப்புமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அதன்பின்பு உரிய இணைப்புகளுடன் அனுப்பப்பட்ட திட்ட அறிக்கையை 2025 நவம்பரில் மீண்டும் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. கோவை, மதுரையின் மக்கள் தொகை குறைவு, திட்டச்செலவு அதிகம், பயண நேரம் குறையாது, சாலை அகலங்கள் குறைவு என பல காரணங்களை கூறியிருந்தது.

By admin