• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வாகனத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு: ஒருவர் கைது

Byadmin

Oct 4, 2026


வடக்கு பிரான்ஸின் நெடுஞ்சாலை ஓய்வுதளம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 47 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வேனில் பிரான்ஸ் எல்லைக்குள் முறையற்ற வகையில் தங்கியிருந்த சுமார் 10 வெளிநாட்டினர் பயணித்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ராய்ஸ் நகர அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை, கொலை முயற்சி, அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக இயங்கி வெளிநாட்டவர்கள் முறையற்ற வகையில் பிரான்ஸ்க்குள் நுழைவதற்கும், நடமாடுவதற்கும், தங்குவதற்கும் உடந்தையாக இருத்தல் மற்றும் சட்டவிரோத ஆள் கடத்தலில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள ரெய்ம்ஸ் நகர சட்ட அமலாக்கப் பிரிவினர், தப்பியோடிய நபர்களைக் கண்டறியவும் இந்த வன்முறைச் செயலின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

By admin