ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் தலைமையில் மும்பையில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி இன்று நடைபெற்றது.
‘விராட் கர்ஜனா மோர்ச்சா’ (மாபெரும் கர்ஜனை பேரணி) எனப் பெயரிடப்பட்ட இந்தப் பேரணி, தெற்கு மும்பையில் உள்ள மெட்ரோ சினிமாவில் தொடங்கி பிருஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தலைமையகம் வரை சென்றது.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் பங்கேற்றனர்.