• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது

Byadmin

Jun 5, 2026


இலங்கை கடற்படையினர், மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகளின்போது 8 டிங்கிகள், 2 கெனோக்கள் மற்றும் 4 ட்ரக்டர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கிண்ணியா, சூடைக்குடா, ஓட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகள் மூலம் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளால் 44 பேர் கைது செய்ப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிரக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு, கொட்பே, மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.

 

By admin