• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

சத்தியமங்கலம் பள்ளி சத்துணவில் மாணவியை மிரட்டி சாணி பவுடரை கலக்க வைத்த நபர் – என்ன நடந்தது?

Byadmin

Sep 4, 2026


விசாரணையில் ஆறுமுகத்தின் மனைவியை சமையலர் பணியில் இருந்து நிறுத்தியதால் இவ்வாறு செய்ததாகக் கூறியதாக சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வைரம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, விசாரணையில் ஆறுமுகத்தின் மனைவியை சமையலர் பணியில் இருந்து நிறுத்தியதால் இவ்வாறு செய்ததாகக் கூறியதாக சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வைரம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்

    • எழுதியவர், பி. சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் ருசி பார்ப்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தில் காலை உணவுத் திட்ட முன்னாள் பணியாளரின் கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.

தனது மனைவியின் பணியைப் பறித்தவர்களைப் பழிவாங்க, பள்ளி மாணவி ஒருவரை மிரட்டி அவர் இதைச் செய்ய வைத்ததாக காவல்துறை விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் சாப்பிடவிருந்த உணவில் சாணி பவுடரை கலக்காமல், ஆசிரியர்களுக்கு எடுத்து வைக்கப்பட்ட உணவில் சிறிதளவு கலந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

சாம்பாரில் கசப்பு – ‘மஞ்சள் தூள் அதிகம் என நினைத்தோம்’

இந்தச் சம்பவம் குறித்து ராமபைலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமுதா பிபிசி தமிழிடம் பேசினார்.

அவர் கூறிய தகவலின்படி, பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு முன், ஆசிரியர்கள் உணவை ருசி பார்த்துப் பரிசோதிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 29ஆம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் ஆசிரியர்களுக்கென தனியாக வைக்கப்பட்டிருந்த உணவும், சாம்பாரும் பரிசோதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

By admin