• Mon. May 11th, 2026

24×7 Live News

Apdin News

சமையல் எண்ணெய், உரம், தங்கம் பற்றி மோதி கூறியவை இந்தியர்களுக்கான எச்சரிக்கையா?

Byadmin

May 11, 2026


தனது உரையில், ஒரு வருட காலத்திற்குப் பெட்ரோல் மற்றும் டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும் மற்றும் சமையல் எண்ணெய்க் பயன்பாட்டைக் குறைக்குமாறும் இந்தியர்களைப் பிரதமர் மோதி வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் மோதி

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வரும் நாட்களில் இந்தியா கடுமையான எண்ணெய் நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளதா? இரான் போர் இந்தியா மீது கவலையளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

சவாலான நாட்களுக்கு இந்திய மக்கள் தயாராக வேண்டுமா? சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது இந்த நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோதி ஏன் மௌனம் காத்தார்?

ஞாயிற்றுக்கிழமையன்று செகந்திராபாத்தில் பிரதமர் மோதி ஆற்றிய உரைக்குப் பிறகு, நிபுணர்கள், தலைவர்கள் மற்றும் சாமானிய மக்களிடையே இந்த விவாதம் தொடங்கியது.

பிரதமர் மோதியின் உரை முடிந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இரான் அனுப்பிய முன்மொழிவை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.

இதன் பொருள், தற்போது இரான் போர் தொடர்பாக நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இது உலகப் பொருளாதாரம் (இந்தியா உட்பட) மற்றும் பங்குச் சந்தைக்கு நல்ல செய்தியல்ல.

By admin