• Fri. Apr 17th, 2026

24×7 Live News

Apdin News

செங்கல்பட்டில் ‘ராக்கெட் லாஞ்சரை’ தூக்கி எறிந்த மாணவர் பலி – தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது ஏன்?

Byadmin

Apr 15, 2026


செங்கல்பட்டில் 'ராக்கெட் லாஞ்சரை' தூக்கி எறிந்த மாணவர் பலி - தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது ஏன்?

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, உயிரிழந்த மாணவர் இமான்ஷூ யாதவ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயுத பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு மலையேற்றம் சென்ற கல்லூரி மாணவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை தூக்கி எறிந்ததால் உயிரிழந்தார் என காவல்துறை கூறியுள்ளது.

மக்கள் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள் இருந்து மாணவர்கள் அனுமதியின்றி சென்றதாக கூறும் காவல் ஆய்வாளர் ரவி காயமடைந்த மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

“வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை அப்புறப்படுத்த ராணுவத்தில் தனிக்குழு உள்ளது” என்றார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார்.

என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் ஆயுத பயிற்சி மையத்தில் இந்திய ராணுவத்தினர், மத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றின் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இங்கு தமிழக காவல்துறையினரும் கமாண்டோ படை வீரர்களும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

By admin