• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

செஞ்சியில் காணாமல் போன 6 வயது சிறுமி எங்கே? 8 நாளாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

Byadmin

Oct 20, 2026


விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி காணாமல் போன வழக்கில் எட்டு நாட்கள் கடந்தும் காவல்துறையின் தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருப்பது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி காணாமல் போன வழக்கில் எட்டு நாட்கள் கடந்தும் காவல்துறையின் தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருப்பது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி காணாமல் போன வழக்கில் எட்டு நாள் கடந்தும் காவல்துறையின் தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“அன்று (அக்டோபர் 11) இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு என் அருகில் தூங்க வைத்தேன். மறுநாள் காலையில் மகளைக் காணவில்லை” என்கிறார், சிறுமியின் தாய்.

“கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினாலும் இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை” என, பிபிசி தமிழிடம் பேசிய செஞ்சி டி.எஸ்.பி தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

மனுவில், ’11ஆம் தேதி என் மகளுக்குப் பிறந்தநாள் என்பதால் இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினோம். உறவினர்களுடன் பேசிவிட்டு இரவு சுமார் 11 மணியளவில் உறங்கச் சென்றேன்’ எனக் கூறியுள்ளார்.

By admin