• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

சௌகார் ஜானகி: தலைமுறைகள் கடந்து முத்திரை பதித்த 10 திரைப்படங்கள்

Byadmin

Aug 21, 2026


சௌகார் ஜானகி

பட மூலாதாரம், ThenappanP-Shree Raajalakshmi Films

படக்குறிப்பு, சௌகார் ஜானகி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் சௌகார் ஜானகி எத்தனை தலைமுறை ரசிகர்களிடம் தன்னை புதுப்பித்துக் கொண்டார், எத்தனை விதமான கதாபாத்திரங்களில் நினைவில் நின்றார் என்பதை வைத்து அவரது சாதனைகளை அளவிட முடியும்.

அந்த வகையில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைப் பயணம் தனித்துவமானது. கதாநாயகியாக அறிமுகமாகி, குடும்பப் பெண், மாவட்ட ஆட்சியர், நகைச்சுவை கதாபாத்திரம், இரட்டை வேடம், தாய், பாட்டி எனப் பல்வேறு பாத்திரங்களில் நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தடம் பதித்தார்.

அவரது குறிப்பிடத்தக்க படங்களாக ‘பாலும் பழமும்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘இரு கோடுகள்’, ‘காவியத் தலைவி’, ‘தில்லு முல்லு’ உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இயக்குநர் கே.பாலசந்தருடன் இணைந்த பிறகு, அதுவரை சோகமும் உணர்ச்சியும் நிறைந்த பாத்திரங்களில் அதிகம் பார்க்கப்பட்ட சௌகார் ஜானகி, நகைச்சுவை, கம்பீரம், அதிகாரம், நுணுக்கமான குடும்ப உணர்வுகள் என அவரது நடிப்பின் எல்லை பல புதிய பரிமாணங்களில் விரிவடைந்தது.

இப்படியாக, சௌகார் ஜானகியின் நடிப்புத் திறன் மற்றும் திரைப் பயணத்தின் முக்கிய கட்டங்களைப் புரிந்துகொள்ள உதவும் 10 திரைப்படங்களை இங்கு பார்ப்போம்.

By admin