• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

சௌதி மீது ஹூத்தி தாக்குதலால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி – மெக்கா ஒப்பந்தம் பற்றி ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Sep 12, 2026


எர்டோகன்,முகமது பின் சல்மான், ஷெபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், TUR Presidency/Murat Cetinmuhurdar/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7, 2026 அன்று சௌதி அரேபியாவின் மெக்கா நகரில் முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி அதிபர் எர்டோகன் (இடதுபுறம்), சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் (நடுவில்) மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (வலதுபுறம்).

    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சௌதி அரேபியா மீதான ஹூத்திகளின் தாக்குதல்கள் குறித்துப் பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன; அண்மையில் கையெழுத்தான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் காரணமாக பாகிஸ்தான் ஒரு பிராந்தியப் போருக்குள் இழுத்துச் செல்லப்படுமா என்ற கேள்வியையும் அவை எழுப்பியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுள் ஏதேனும் ஒரு உறுப்பினர் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து உறுப்பினர் நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் செப்டம்பர் 8 அன்று எச்சரித்திருந்தார்.

எந்தவொரு ‘தூண்டப்படாத ஆக்கிரமிப்பு’ நிகழ்ந்தாலும் அல்லது ஏமன் மோதல் சௌதி அரேபியாவுக்குப் பரவினாலும் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஜியோ நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவாஜா ஆசிஃப், ஒப்பந்தத்தின் விதிகள் தொடர்பாக ‘எந்தவிதமான குழப்பமும் இல்லை’ என்று குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இது தொடர்பாக எந்தச் சந்தேகமும் இருக்க வேண்டாம்… நாங்கள் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள்; தேவைப்பட்டால் அதன்படி செயல்படுவோம்” என்றார்.

By admin