• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்புக்கு அதிக முக்கியத்துவம் தந்து புதினை ஜின்பிங் புறக்கணித்தாரா? முத்தரப்பு சந்திதப்பு பற்றிய பார்வை

Byadmin

Nov 20, 2026


ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு, சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

படக்குறிப்பு, 2026 நவம்பர் 19: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ‘கைலின் வில்லா’ இல்லத்தில் நடைபெற்ற முத்தரப்புச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, சீன அதிபர் ஷி ஜின்பிங் (மத்தியில்), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (வலதுபுறம்) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (இடதுபுறம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தெற்கு நகரமான ஷென்சென் வந்தடைந்தபோது, அவரை நேரில் வரவேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் விமான நிலையத்திற்கே வருகை தந்திருந்தார்.

ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவிற்கு வந்தபோது, அவரை வரவேற்கும் பொறுப்பு ஷி ஜின்பிங்கின் தலைமை அதிகாரியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சாய் கி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஹாங்காங்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் முன்னணி நாளிதழான செளத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், சீனாவின் அரசுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டுத் தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு நேரில் சென்ற நிகழ்வு கடைசியாக 1959ஆம் ஆண்டில்தான் நடைபெற்றது என்று குறிப்பிட்டிருந்தது.

அப்போது, சீன தலைவர் மாவோ சேதுங், சோவியத் ஒன்றியத்தின் தலைவர் நிகிதா குருஷேவை வரவேற்பதற்காக பெய்ஜிங் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். குருஷேவின் அந்தப் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததுடன், அக்கால கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான மூலோபாய அவநம்பிக்கையும் நிலவியது.

ஆனால், இம்முறை நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது. ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலிருந்து டிரம்ப் கீழே இறங்கியதும், உலகின் மிக வலிமையான இரு நாடுகளின் தலைவர்களும் கேமராக்களுக்கு முன்னிலையில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வரவேற்றனர். ஜின்பிங் இவ்வாறு வெளிப்படையாக அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவது மிகவும் அரிதான நிகழ்வாகும் என்று அந்தச் செய்தி சுட்டிக்காட்டியது.

By admin