7
ஐரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எல்லை கடந்த பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட மக்கள் தயாராகி வருகின்றனர்.
குறித்த மாபெரும் போராட்டமானது, நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் இந்த எல்லை கடந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில், அரசாங்கங்களுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருகின்றன.
இதேவேளை, 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இளைஞர்கள் தலைமையிலான கூட்டணியொன்று தெரிவித்துள்ளது.
