• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா விலகல்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பவுமா விலகல்

Byadmin

Nov 20, 2026


தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இப்போட்டியின் போது பேட்டிங் செய்த டெம்பா பவுமாவுக்கு வலது காலின் கெண்டைக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டத்தின் இடையே காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் மீண்டும் களமிறங்கி 68 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெம்பா பவுமா

இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் காயம் உறுதி செய்யப்பட்டதால் வரும் 23-ம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin