• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

டேவிட் ரஷ்: அமெரிக்காவில் ஒரு உளவாளி 200 மில்லியன் டாலரை மோசடி செய்தது எப்படி?

Byadmin

Oct 12, 2026


டேவிட் ரஷ், முன்னாள் சிஐஏ அதிகாரி, அமெரிக்கா, உளவு

படக்குறிப்பு, டேவிட் ரஷ்

    • எழுதியவர், மேக்ஸ் மாத்ஸா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தனது வீட்டில் நூற்றுக்கணக்கான தங்கக் கட்டிகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரி, தற்போது அமெரிக்க அரசிடம் சுமார் 20 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1,935 கோடி) மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

போலி ஒப்பந்தங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் இந்தப் பெரும் மோசடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

49 வயதான டேவிட் ரஷ், ஒப்பந்த நிபந்தனைகளின்படி அமெரிக்க அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய ஆடம்பர வீடுகள், கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதையும் ரஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை விளக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், “குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin