• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிந்தனவா? கைடன்ஸ் சர்ச்சையின் பின்னணி

Byadmin

Nov 21, 2026


தமிழ்நாட்டின் முதலீட்டுத் தகவல்கள் கசிந்ததாக சர்ச்சை - கைடன்ஸ் நிறுவனம் அளித்த விளக்கம் என்ன?

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் கைடன்ஸ் (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆந்திர பிரதேசத்திற்கு முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகவும் வெளியான உறுதி செய்யப்படாத ஊடகச் செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் அவற்றை மறுத்து விளக்கமளித்துள்ளது.

கைடன்ஸ் நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜிநாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம், ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக, உயர்கல்வி, சிறந்த வேலைவாய்ப்புகள், இடமாற்றம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகப் பணியில் இருந்து விலகுவது இயல்பான ஒன்று என்று கூறியுள்ளது.

மேலும், பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்லும் ஊழியர்களின் தொழில்முறை விருப்பங்களைத் தாங்கள் மதிப்பதாகவும் கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக இருந்து வருவதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன சர்ச்சை?

கைடன்ஸ் நிறுவனம்

கடந்த சில நாட்களாக கைடன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், சிலர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்களில் உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகின.

By admin