புதிய நடைமுறை
இந்த ஆண்டு மட்டும், அதுவும் ஒரே ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றலாம் என்பது, அங்கு சில நூற்றாண்டுகளாக நடைமுறை வழக்கமாகவும், பாரம்பரியமுறையாகவும் சமூக நல்லிணக்கத்துடன் நடந்து வரும் தீபத் திருவிழா முறையை முறிப்பதும், புதிய முறையை அறிமுகப்படுத்துவதும் சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.
சட்டத்தின் அடிப்படையிலும், உரிய வரலாற்று ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம், நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய ஓர் இடைக்கால தீர்ப்பு வழங்கியிகுப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறான மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.