• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

தெலுங்கானாவில் நள்ளிரவில் பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

Byadmin

Jun 5, 2026


தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அடுத்த மிரியாலகுடா பகுதியை சேர்ந்தவர் தனம்மா. இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவருடைய மகன் லட்சுமணன் (16) மற்றும் மகள் பிரணதி (14) ஆகியோருடன் அவருடைய தாயார் சந்திரகலா வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று தனம்மா வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் சந்திரகலா மற்றும் லட்சுமணன், பிரணதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது. மேலும் அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தூங்கி கொண்டிருந்த பாட்டி, பேரன், பேத்தி 3 பேரும் உயிரோடு எரிந்து பலியானார்கள்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். வீட்டில் எரிந்த தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. தகவல் கிடைத்ததும், போலீசார் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். போலீசார் 3 பேர் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin