• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

தேசிய விருதுகளை அள்ளும் தனுஷ் | பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்

Byadmin

Oct 7, 2026


நடிகர் தனுஷ் இப்போது தேசிய அளவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர். மூன்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அவர் வென்றிருக்கிறார். இன்னும் சில வருடங்களில் அதில் அவர் சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில் அவர் குறித்து பிரபல நடிகர் சுகுமார் பகிர்ந்திருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “தனுஷ் ஒரு பிரம்மாண்ட ஆச்சரியம். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் கூடவே பயணிக்கும் வாய்ப்பு இயக்குனர் பூபதி பாண்டியன் சார் ஏற்படுத்தினார்.

வாய்பேசாத மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பேன்.செம்ம நகைச்சுவை உணர்வுள்ளவர் பூபதி பாண்டியன் சார்.ஒருமுறை பிலிம்சிட்டியில் “காதல் வானிலே” எனும் படப்பிடிப்பு காமெடி போர்ஷன் நடிக்கையில் பூபதி சார் போன் பண்ணாரு.. அப்போது தெலுங்கு புதுமுகம் ஒரு பையன் ஹீரோவாக நடித்தான்.அவனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

“எங்கே இருக்கீங்க சுகுமார்?” அண்ணே ஒரு புதுப்படம் காமெடி டிராக் பண்ணிட்டு இருக்கேன். படம் பேரு? “காதல் வானிலே”உனக்கு மட்டும் எப்டித்தான் இப்பிடி படம்லாம் கிடைக்குதோ.. அண்ணே நான் என்ன பெரிய படம்லாம் நடிக்க மாட்டேன்னு பேட்டியா குடுத்தேன்.என்னை யாரு கூப்ட்டாலும் போய் நடிப்பேன். யாரு ஹீரோ? புதுப் பையன் அண்ணா. எப்டி பண்றாப்ல (அவன் அருகில் இருந்ததால் கொஞ்சம் ஏத்தி சொல்வோம் என) பார்த்தா பையனுக்கு முதல் படம் மாதிரியே தெரிலண்ணே ஏன் கடைசி படம் மாதிரி தெரியுதா?” எனக்கு அந்தக கௌண்ட்டருக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னே தெரியாமல்..அண்ணே ஷாட் கூப்டுறாங்க என்று கட் பண்ணிட்டேன்.

வேற டிராக் ஓடுதோ..விஷயத்துக்கு வரேன். தனுஷ் எப்போதும் அவருக்குள்ளாக காட்சியை எப்படி நடிப்பது என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். அன்றைய காட்சிகளை கவனமாகக் கேட்டு அதிலேயே ஊறிக்கொண்டிருப்பார். தனியாக பேசிக்கொண்டிருப்பதுபோல் தெரியும் அவரைக்கவனிப்பது தெரிந்தால் புன்னகைப்பார்.”என்னைப்பார்த்தா loosu மாதிரி தெரியுதா? என்பார். தேசிய விருது வாங்காம விடமாட்டீங்க போல… எலும்பு முறிந்துவிட்டது: “இல்ல நான் தேசிய விருது கொடுக்கிற அளவுக்கு வளரனும் என்றார்.

அப்போ புரியல இப்போ புரியுது. தனுஷ் நடிப்பில் பொறாமை கொள்ளும் அளவிற்று பிசாசுத்தனமான வெளிப்பாடிருக்கும்.(பொல்லாதவன், புதுப்பேட்டை) எந்தக் கதாநாயகரும் உணர மறுக்கும் கதாபாத்திரம் அசுரன்..அவரின் தந்தை தேனி கண்டமனூரில் அவருடைய குலதெய்வக் கோவிலில் 99ம் வருடம் நான் அறிமுகமான” காதல் ஜாதி “படத்தில் நடித்தபோது பள்ளி விடுமுறையில் தனுஷ் சகோதரியுடன் ஊருக்கு வந்திருந்து மரத்திலேறி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து அவருடைய கை எலும்பு முறிந்துவிட்டது.

சூட்டிங்கை நிறுத்திவிட்டு அவரை ஆஸ்பிட்டல் தூக்கிச் சென்றார்கள் அப்போது பிரகாஷ்ராஜ் சார்.. “யாரு இந்தப்பையன்?.. “டைரக்டர் பையன் வெங்கடேஷ் பிரபு ” என்றார்கள்..அப்போது தெரியாது இப்படி ஒரு ஹீரோ தமிழ் சினிமாவுக்கு கிடைப்பார் என. அவர் பாலிவுட் ஹாலிவுட் உயரத்திற்கெல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார். இன்னும் உயரம் செல்லட்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி : tamil.filmibeat.com

By admin