‘நீளிரா’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் சனத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேகப் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனத், மடோனா செபாஸ்டியன், இமயா, டெப்னிதா கர், ‘வாஸ்ஸப்’ மணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான ரசிகர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்த நிலையில்… இந்த திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
The post நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு appeared first on Vanakkam London.