• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

நன்கு பழகிய நாய்கள்கூட திடீரென ஆக்ரோஷமாக தாக்குவது ஏன்? சமாளிப்பது எப்படி?

Byadmin

Jul 19, 2026


நாய்கள் திடீரென ஆக்ரோஷமாக தாக்க வருவது ஏன்? எப்படி சமாளிப்பது?

பட மூலாதாரம், Getty Images

தெருநாய்கள் வழிப்போக்கர்களைப் பார்த்துக் குரைப்பது, இருசக்கர வாகனங்களைத் துரத்துவது, நடந்து செல்வோரை திடீரெனத் தாக்குவது குறித்து இந்தியா முழுவதுமே பரவலாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

அதிகாரபூர்வ கண்காணிப்புத் தரவுகள், இந்தப் பிரச்னை வெகுவாக அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், 2022இல் 21,89,909, 2023இல் 30,52,521, 2024இல் 37,15,713 என்கிற அளவில் நாய்க்கடி சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே 5,19,704 நாய்க்கடி சம்பவங்கள் நிகழ்ந்ததாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பின் தரவுகள்படி, இந்தியாவில் பதிவாகும் ரேபிஸ் மரணங்களில் 30% முதல் 60% வரை 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே உள்ளனர்.

“நாய்களின் திடீர் ஆக்ரோஷ நடத்தைகளுக்குப் பல்வேறு காரணிகள் இருக்கலாம்,” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது குறிப்பிட்டார் புடாபெஸ்டில் இருக்கும் எட்வாஸ் லோராண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, நடத்தையியல் துறை பேராசிரியர் எனிகோ குபின்யு.

இதில் மரபியல், சமகால வாழ்வியல் சூழல் ஆகிய இரண்டின்‌ பங்கையும் தனித்தனியாக தெளிவாகப் பிரித்தறிய முடியாது எனக் கூறிய அவர், “மன அழுத்தம் அல்லது பயத்திற்கான உணர்திறன் அளவில் மரபியல் வேறுபாடுகள் தாக்கம் செலுத்தக்கூடும். அதேநேரம், இந்தப் போக்குகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை அவை எதிர்கொண்ட அனுபவங்கள் தீர்மானிக்கின்றன” என்றார்.

By admin