• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

நன்றி தெரிவித்த சூர்யா! – Vanakkam London

Byadmin

Aug 16, 2026


வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவான “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில்,  தமக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அதில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை, சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி, “அழகான கதாபாத்திரங்கள் மற்றும் மிகச்சிறப்பான நடிப்பு!! படம் முழுவதும் முகத்தில் புன்னகையை வரவழைத்து, இதயத்தை அன்பால் நிரப்பும் ஒரு முழுமையான திரைப்படம்!! மீண்டும் ஒருமுறை  பார்க்க ஆசைப்படுகிறேன்” என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவும் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

By admin