• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

நாட்டில் மோசமடைந்த காற்றின் தரம்; மக்களுக்கு அறிவுறுத்துமாறு சஜித் கோரிக்கை

Byadmin

Nov 21, 2026


நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண்  தற்சமயம் வேகமாகக் குறைந்து வருகின்றது. இத்தகைய நிலையில் நாட்டுக்குத் தெளிவான அறிவிப்பொன்றை விடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே  இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரம் வேகமாகக் குறைந்து வருகின்றது.காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைவது சுவாச நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது   ஆகையினால், இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்தல் ஒன்றை நாட்டுக்கு வழங்க வேண்டும்.

குறிப்பாக சுகாதார அமைச்சர் இதுதொடர்பில் உடனடியாக செயற்பட்டு, இவ்வறான நிலையில் நாட்டு மக்களுக்கு தெளிவொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post நாட்டில் மோசமடைந்த காற்றின் தரம்; மக்களுக்கு அறிவுறுத்துமாறு சஜித் கோரிக்கை appeared first on Vanakkam London.

By admin