• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

நெதர்லாந்திலிருந்து இந்தியா திரும்பும் சோழர் செப்பேடுகள் – அதில் உள்ள வரலாறு என்ன?

Byadmin

May 18, 2026


சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி - அதில் என்ன எழுதப்பட்டுள்ளன?

பட மூலாதாரம், X/NarendraModi

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட உள்ளதாக மே 16-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

21 பெரிய செப்பேடுகளையும் 3 சிறிய செப்பேடுகளையும் கொண்டுள்ள இவை, சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதாக பிரதமர் மோதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“செப்பேடுகளைக் கொண்டு வருவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை நீண்டகாலமாக மேற்கொண்டாலும் தற்போது மட்டுமே சாத்தியமாகியுள்ளது” என்கிறார், வரலாற்றாய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியம்.

சோழர்கால செப்பேடுகளில் என்ன உள்ளன? இவை நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி என்ன?

Copperplates, Choza, india, Netherland, nagapattinam

பட மூலாதாரம், X/NarendraModi

படக்குறிப்பு, குலோத்துங்கச்சோழன் வழங்கிய இரண்டாவது செப்பேடு

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தில் சோழர்கால செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. ‘ஆனைமங்கலச் செப்பேடுகள்’ என அழைக்கப்படும் இவை, சோழர்களின் வரலாறு குறித்த முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகின்றன.

By admin